சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு, தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்வு இன்று பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB), யாழ் கிளையில் இடம்பெற்றது
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனனின், யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு அலுவலக உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்படி, தலா 5 லட்சம் ரூபாய் கடன் உதவிக்கான காசோலைகள் யாழ். மாவட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB), யாழ் கிளையின் முகாமையாளர், உத்தியோத்தர்கள், மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Post a Comment