குடும்பஸ்தர் மீது சரமாரி கத்திக்குத்து -வவுனியாவில் சம்பவம்- ' - Yarl Voice குடும்பஸ்தர் மீது சரமாரி கத்திக்குத்து -வவுனியாவில் சம்பவம்- ' - Yarl Voice

குடும்பஸ்தர் மீது சரமாரி கத்திக்குத்து -வவுனியாவில் சம்பவம்- ' 
வவுனியா- பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில்  சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

நேற்று இரவு குறித்த நபர், மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி முச்சக்கரவண்டியை ஓட்டி சென்றுள்ளார்.

இதன்போது இடையில் வழிமறித்த பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கடன் கொடுக்கல் வாங்கலே காரணமென தெரியவருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post