யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பிரதம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு பொலீஸ் நிலையங்களுக்கான முச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கையளிக்கப்பட்ட 40 முச்சக்கர வண்டிகளும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ் போலீஸ் நிலையத்தில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ,யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டு தமக்குரிய முச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொண்டார்கள்
யாழ்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தலா இரண்டு முச்சக்கர வண்டிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுு
Post a Comment