சுகாதார பிரிவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள் - வடக்கு மக்களிடம் பிரதி பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் - Yarl Voice சுகாதார பிரிவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள் - வடக்கு மக்களிடம் பிரதி பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் - Yarl Voice

சுகாதார பிரிவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள் - வடக்கு மக்களிடம் பிரதி பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்



வடக்கில் கொரோனாவை  கட்டுப்படுத்த  சுகாதார பிரிவினருக்கு  ஒத்துழையுங்கள்  என வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை  பொலிஸ் நிலையங்களுக்கு  வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
 
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ,யாழ் பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கென 20 முச்சக்கர வண்டிகளை இன்று வழங்கி வைத்துள்ளோம் 


அதேபோல் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கும்  20 முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது 


இன்று முச்சக்கரவண்டி வழங்கப்பட்டமைக்கு இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் தமக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் குறிப்பாக போலீஸ் நிலையங்களில் இந்த வாகன பிரச்சனையானது நீண்டகாலமாக காணப்பட்டது அந்த வாகன பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் குறித்த வேலைத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது 

தற்போது உள்ள கொரோனா நிலைமை மற்றும் ஏனைய  பொதுமக்களிற்கு  சேவை  வழங்க   பொலீஸ் நிலையங்களில் வாகன தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக காணப்பட்டது அந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு இன்றையதினம் கிட்டியுள்ளது ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் 2 முச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது  மேலும் புதிதாக திறக்கப்பட உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இந்த முச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட உள்ளது

அதேபோல் எதிர்வரும் காலங்களில் போலீசாருக்கு  மோட்டார் சைக்கிள் மற்றும் தேவையான வாகனங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. 
 குறித்த முச்சக்கர வண்டிகளை பாவிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை சரியான முறையில் நீண்ட காலம் பாவிக்கக் கூடியவாறு  பாவிக்க வேண்டும் பொதுமக்களுக்கான சேவை வழங்குவதற்கு  வாகனங்களை பயன்படுத்தி பொலிஸ் உத்தியோகத்தர்கள் திறமையாக செயற்பட வேண்டும் என தெரிவித்த தோடு

தற்போது நாடுபூராகவும் கொவிட் நிலைமை சற்று அதிகமாக காணப்படுகின்றது 

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் சில பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது 

நான் ஏற்கனவே தென் மாகாணத்தில் தான்  கடமையாற்றியிருந்தேன் வடக்கு மாகாணத்தில்  நான் கடமை ஏற்றபின்  பருத்தித்துறை மற்றும் ஏனைய சில பகுதிகள் வடக்கு மாகாணத்தில் முடக்கப்பட்டுள்ளன அந்த பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின்படி சில வேலைத்திட்டங்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது எனவே பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை இந்த காலப்பகுதிகளில் வழங்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post