யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்! எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்! எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice

யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்! எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதியாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டுடியோ ஒன்றினை செயற்படுத்தி வந்த இரு குழுக்கள் இரவு தங்கியிருந்தபோது பிறிதொரு குழுவினர் நேற்று நள்ளிரவு 9.40 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது அறுவர் மோட்டார் சைக்கிளில் வந்து வாள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீட்டைத் தாக்கியும் குறித்த ஸ்டூடியோ அமைந்திருக்கும் பகுதியை தீமூட்டி எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் சிறு காயங்களுக்கு உள்ளான ஒருவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏழுபேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post