கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்: விஜய்யுடன் இணையும் முதல் படம்! - Yarl Voice கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்: விஜய்யுடன் இணையும் முதல் படம்! - Yarl Voice

கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்: விஜய்யுடன் இணையும் முதல் படம்!நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அப்போது விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post