யாழிலுள்ள இந்து ஆலயமொன்றில் சுவாமி காவிய இராணுவம் - இந்து மதத்திற்கே இழுக்கு என கொந்தளிக்கும் பிரதேச மக்கள் - Yarl Voice யாழிலுள்ள இந்து ஆலயமொன்றில் சுவாமி காவிய இராணுவம் - இந்து மதத்திற்கே இழுக்கு என கொந்தளிக்கும் பிரதேச மக்கள் - Yarl Voice

யாழிலுள்ள இந்து ஆலயமொன்றில் சுவாமி காவிய இராணுவம் - இந்து மதத்திற்கே இழுக்கு என கொந்தளிக்கும் பிரதேச மக்கள்தற்போது கோவிட் 19 தொற்றினை காரணம் காட்டி மக்களை வெளியில் நிற்க கோயில் தர்மகத்தாவின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாக இராணுவத்தினரை கூட்டி வந்து சுவாமி காவ வைத்த சம்பவம் நேற்று அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் 10 வது திருவிழாவான தேர்த்திருவிழாவான நேற்று, இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

 தற்போது தீவிர நோய்ப்பரவல் காரணமாக அணைத்து ஆலயங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

 அச்சுவேலி சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமான நாள் முதல் பக்தர்கள் உள்ளே செல்ல மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந் நிலையில் கொடியேற்ற திருவிழாவிற்கும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

இன்று தேர்த்திருவிழாவிற்கு ஆலயத்தின் தர்மகத்தா தனது தன்னிச்சையான முடிவினால் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவ வீரர்களை அழைத்து வந்து சுவாமியினை தோலில் சுமப்பதற்கு இடம் அழித்துள்ளார். 

கோயில் நலன் சார் இளைஞர்கள் அதிகளவானோர் இருக்கின்ற அளவில் இராணுவத்தினரை அழைத்து வந்து சுவாமி காவ வைத்தமை கோயில் இளைஞர்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 ஆலயத்தின் பிரதான அர்ச்சகர்,  பூஜை வழிபாட்டினை சிறப்பாக நடத்தி சென்றவரான பிரதான அர்ச்சகர் இந்துகுருமார் ஒன்றியத்தின் உயர் நிலையில் உள்ள ஒருவர் . இவ்வாறு இருக்கும் போது இந்து மதம்  எங்கே செல்கின்றது என பக்தர்கள் அணைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post