யாழ் ஆரிய குளத்தை புனரமைக்கும செயற்திட்டம் அங்குரார்ப்பணம் - Yarl Voice யாழ் ஆரிய குளத்தை புனரமைக்கும செயற்திட்டம் அங்குரார்ப்பணம் - Yarl Voice

யாழ் ஆரிய குளத்தை புனரமைக்கும செயற்திட்டம் அங்குரார்ப்பணம்யாழ்ப்பாண மாநகர முதல்வரின் எண்ணக்கருவில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் ஆரியகுளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக புனரமைக்கப் படாமல் இருந்த குளங்களை மீள புனரமைப்பதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய யாழ் நகரில் உள்ள ஆரிய குளத்தை புனரமைக்க மேற்கொண்ட நடவடிக்கை இன தொடராக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து ஆரிய குளத்தை புனரமைப்பதற்கான செயற் திட்டத்தை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இந்த அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு யாழ் ஆரியகுளம் முற்போக்கு வாலிபர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் உள்ளிட்ட மாநகர சபையின் ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் கடட
 நிறுவன பணியாளர்கள் பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post