கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் புடவைக்கடைக்க தீ வைத்த வன்முறை கும்பல் கைது! - Yarl Voice கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் புடவைக்கடைக்க தீ வைத்த வன்முறை கும்பல் கைது! - Yarl Voice

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் புடவைக்கடைக்க தீ வைத்த வன்முறை கும்பல் கைது!
கொக்குவில் குள்ப்பிட்டி சந்தியில் புடவைக்கடையினுள் புகுந்து அடித்துடைத்து கடைக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும்  வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் புடவை கடை ஒன்றுக்கு பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர். 

இதன்போது கடையில் இருந்த புடவைகள் மற்றும் நேற்று கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள் உட்பட பல இலட்சம் ரூபாய் சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
 
தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் கைக்கூலிகள் மூலம் வைத்து செய்யப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post