நெடுந்தீவில் இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படாதது ஏன்? வேலணை சுகாதாரப் பிரிவு அசண்டையீனம் - Yarl Voice நெடுந்தீவில் இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படாதது ஏன்? வேலணை சுகாதாரப் பிரிவு அசண்டையீனம் - Yarl Voice

நெடுந்தீவில் இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படாதது ஏன்? வேலணை சுகாதாரப் பிரிவு அசண்டையீனம்
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் அசண்மைடயீனத்தால் இதுவரை நெடுந்தீவுப் பகுதி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரியவருகின்றது.

நெடுந்தீவுப் பிரதேசத்தில் இன்றுவரை எவருக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

நெடுந்தீவுப் பிரதேசத்து;கான தடுப்பூசிகள் கடந்த தடவை தடுப்பூசி வழங்கலிக் போதே ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் அவை அங்கு செலுத்தப்படாமைக்கு வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அக்கறையீனமே காரணமென தெரியவந்துள்ளது.

மேலும் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மந்தகதியில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்நிலையில் தற்போது நெடுந்தீவில் பரவலாக பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் அங்கு தடுப்பூசி பாடப்படாமையால் மக்கள் பயப்பீதியில் உள்ளனர்.

உரிய அதிகாரிகள் விரைந்து நெடுந்தீவு மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்க முன்வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post