ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் கொரோனா தடுப்பூசி சந்தப்பத்தை தவறாவிடாது போடக் கேரிக்கை - Yarl Voice ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் கொரோனா தடுப்பூசி சந்தப்பத்தை தவறாவிடாது போடக் கேரிக்கை - Yarl Voice

ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் கொரோனா தடுப்பூசி சந்தப்பத்தை தவறாவிடாது போடக் கேரிக்கை
ஊர்காவற்றுறையில் தற்போது கொவிட் தடுப்பூசி செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுவதால் இச் சந்தர்ப்பத்தை அனைத்து மக்களும் பயன்படுத்த முன்வரவேண்டும் என பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஊர்காவற்றுறை பகுதியில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதும் சிலர் அறியாமை மற்றும் பயத்தின் காரணமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

குறித்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் தடுப்பூசிகளை மீண்டும் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்கும் நிலை ஏற்படலாம.; 

மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பாவிப்பது மற்றும் வெளிநாட்டுப் பயணம், மாகாணம் விட்டு மாகாணம் பயணிப்பது போன்றவற்றில் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

ஆகவே ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் தற்போதய சந்தர்ப்பத்தை தவறவிடாது தடுப்பூசியினை போட்டுக்கொள்வதன் மூலம் தங்களதும் தங்கள் உறவுகளதும் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்வரவேண்டும் என பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post