சஜித் மீண்டும ஐக்கியதேசிய கட்சிக்கு திரும்ப வேண்டும் - கட்சியின் பொது செயலாளர் அழைப்பு - Yarl Voice சஜித் மீண்டும ஐக்கியதேசிய கட்சிக்கு திரும்ப வேண்டும் - கட்சியின் பொது செயலாளர் அழைப்பு - Yarl Voice

சஜித் மீண்டும ஐக்கியதேசிய கட்சிக்கு திரும்ப வேண்டும் - கட்சியின் பொது செயலாளர் அழைப்புசஜித்பிரேமதாசவை ஐக்கியதேசியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அந்தகட்சி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

கட்சியின் சிரேஸ்ட பிரதிதலைவர் ருவான்விஜயவர்த்தன பொதுசெயலாளர் பாலித ரங்க பண்டார இருவரும் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

நாங்கள் சஜித்பிரேமதாசவை அவரதுமூதாதையர் இல்லத்திற்கு மீண்டும் திரும்புமாறு அழைப்புவிடுக்கின்றோம் என வேண்டுகோள் விடுத்துள்ள பாலிதரங்கபண்டார ஒருவர் தனதுமூதாதையர் இல்லத்திற்கு திரும்பிவருவதற்கு வெட்கப்படக்கூடாது என தெரிவீத்துள்ளார்.

இதுநேர்மையான அழைப்பு என தெரிவித்துள்ள பாலித ரங்க பண்டார அவரது தந்தை காரணமாகவே சஜித்  அரசியலில் ஈடுபட்டார் அவரது தந்தை ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவர் என்பதை நினைவுபடுத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post