யாழிலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் திடீர் சோதனை! - Yarl Voice யாழிலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் திடீர் சோதனை! - Yarl Voice

யாழிலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் திடீர் சோதனை!யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால்  மானிப்பாய்,  சண்டிலிப்பாய்,தொட்டிலடி,
சங்கானை, கீரிமலை, கட்டுவன் ஆகிய பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

உரம் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் எரிவாயு வர்த்தக நிலையங்களும் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும்,பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post