தென்மராட்சி மீசாலை ஐயா கடைப் பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் தனது வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நின்ற சமயம் அவர் மீது இனந்தெரியாத குழுவொன்று வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.
இதில் 39 வயதான வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment