தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை! - Yarl Voice தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை! - Yarl Voice

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை!நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதேபோல் வட மாகாண அதிபர் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன் தெரிவித்தார்

 இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்த அரசானது தனது ஆட்சிக் காலத்தில் சில கோட்பாடுகளை முன்வைத்து இருந்தது அதிலும் 2023 ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தத்தை கொண்டு வந்தது அதேபோல் மாணவர்களின் சீருடை மாற்றத்தைக் கொண்டு வந்தது கொரோனா  காலத்திலே அவ்வாறு பல்வேறுபட்ட செயற்திட்டங்களை இந்த குறுகிய காலத்திலேயே இந்த அரசு முன்னெடுத்தது.

அரசின் சகல  செயற்பாடுகளும் பல்வேறுபட்ட மாற்றங்களும் இந்த கொரோனா காலத்திலே முன்னெடுக்கப்பட்டது.

 அதேபோல ஆசிரியர்கள் அதிபர்கள் இந்த காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவறு என கூறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது மாணவர்களின் கல்வியில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்

வட மாகாணத்தில் 13 வலயங்கள் செயல் நிலையில் உள்ளன. சம்பள முரண்பாடு அதாவது 30 வருடங்களாக காணப்படுகிற சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு சகலரும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் நமக்கு வெற்றி கிடைக்கும் வரை  போராட்டத்தை நாங்க முன்னெடுப்பதன் மூலம் தமக்கு உரிய உரிமைகளை மீட்டெடுக்க முடியும்

 நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்படும்  போராட்டத்திற்கு சகல ஆசிரியர்கள், அதிபர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் வடக்கு மாகாணத்திற்குட்பட்டசகல வலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் 

இந்தப் போராட்டத்தை நாங்கள் ஆதரவு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எமக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்

அத்தோடு இந்த கொரோனா  காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்லைன் கல்வி முறையை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் சில பாடசாலைகளில் ஒன்லைன் கல்விவி செயற்படுத்தப்படவில்லை இதனுடைய தாக்கம் எதிர்வரும் 2,3 ஆண்டுகளில்  உணரப்படும்.

இலங்கையில் 14 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நிலையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிபர்கள் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post