யாழ் கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் - Yarl Voice யாழ் கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் - Yarl Voice

யாழ் கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்
யாழ்.கல்லுண்டாய் புதிய வீட்டு குடியிருப்பு மக்கள் பல கோரிக்கையை முன்வைத்து இன்று (22) முற்பகல்10 மணியளவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலரிடம் ஒரு மகஜரையும் கையளித்தனர்.

குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறும், மழை காலங்களில் வெள்ளம் தேங்காத வாறு மண் போட்டு நிலப் பகுதியை உயர்த்தித் தருமாறும், நீர் வடிந்தோடுவதற்கு வடிகாலை கட்டித் தருமாறும் கோரி பிரதேச செயலகம் முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நீண்ட காலப் பிரச்சினையாக இருப்பதால், பல தடவைகள் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் மகஜர் கையளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

80 குடும்பங்கள் வசிக்கும் இந்த கல்லுண்டாய் புதிய வீட்டு குடியிருப்பில் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறி மக்களை குடியேற்றிவிட்டு கண்டும் காணாமல் கைவிட்டுவிட்டனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.20

0/Post a Comment/Comments

Previous Post Next Post