இலங்கையில் கொரோனா வைரஸ் குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் எவையும் இல்லை – ஹேமந்த ஹேரத் - Yarl Voice இலங்கையில் கொரோனா வைரஸ் குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் எவையும் இல்லை – ஹேமந்த ஹேரத் - Yarl Voice

இலங்கையில் கொரோனா வைரஸ் குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் எவையும் இல்லை – ஹேமந்த ஹேரத்இலங்கையி;ல் டெல்டா நோயாளர்களின் எண்ணிக்கை குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் எவையுமில்லை என மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெல்டா கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணிப்பதற்கான உறுதியான பொறிமுறை எதுவுமில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரசினை அடையாளம் காண்பதற்கு ஒவ்வொரு நோயாளியையும் மரபணுவரிசை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் அது மிகவும் சவாலான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளிகள் குறித்த மதிப்பீடுகள் மாத்திரம் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலநகரங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாக வைத்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் சமீபத்தில் மதிப்பீடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post