சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா கொத்தணி – மருத்துவர்களும் பாதிப்பு - Yarl Voice சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா கொத்தணி – மருத்துவர்களும் பாதிப்பு - Yarl Voice

சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா கொத்தணி – மருத்துவர்களும் பாதிப்பு
சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவாகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பல மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட மருத்துவர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தி உள்ளனர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாகசுகாதார துறையினர் மத்தியில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,நாளாந்தம் அதிகரித்த அளவில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார துறை டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகத அதேவேளை சிரேஸ்ட அதிகாரிகள் டெல்டா வைரசே பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பலமருத்துவமனைகளில் புதிய நோயாளர்களை அனுமதிக்க முடியாத நிலை காணப்படுவதுடன் ஒக்சிசனிற்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post