தலிபானுக்கு பாகிஸ்தான் ஆதரவு ! மறுக்கும் பிரதமர் - Yarl Voice தலிபானுக்கு பாகிஸ்தான் ஆதரவு ! மறுக்கும் பிரதமர் - Yarl Voice

தலிபானுக்கு பாகிஸ்தான் ஆதரவு ! மறுக்கும் பிரதமர்

 

ஆப்கான் அரசுக்கு எதிராக போராடிவரும் தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஆதரவு வழங்கி வருவதாக எழுந்த அறிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிராகரித்துள்ளார். 

இது ஒரு வெட்டித்தனமான பேச்சு என PBS தொலைக்காட்சிக்கு வழங்கிய செய்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் கிளற்சியாளர்களை அடக்குவதற்கு அமெரிக்காவுக்கு தேவையான உளவு வேளைகளில் ஈடுபடுவதற்கான தளத்தை பாகிஸ்தானில் அமைக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார். 

இனிமேலும் நாட்டின் எல்லையில் சண்டையிடக்கூடிய அல்லது தீவிரவாத செயல்களுக்கு துணைபோகக்கூடிய எண்ணம் நாட்டிற்கு இல்லை என்றும் அவ்வாறான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு துணைபோனதால் தற்கொலைத் தாக்குதல்களால்  நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை சீர்குலைந்தது எனவே நாம் எந்த ஒரு பிரச்சனைக்குள்ளும் தலையிட விரும்பவில்லை எனவும் கான் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post