இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டுமொரு முடக்க நிலைக்கான அச்சம் - Yarl Voice இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டுமொரு முடக்க நிலைக்கான அச்சம் - Yarl Voice

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டுமொரு முடக்க நிலைக்கான அச்சம்

 


இந்தியாவில் கடந்த மூன்று வாரத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியதை அடுத்து  மற்றுமொரு கோவிட் 19 அலைக்கான அச்சம் எழுந்துள்ளதுடன்  இதனால் நாடு மீண்டும் முடக்க நிலைக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்படலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது .

சித்திரை, வைகாசி மாதங்களில் டெல்டா வகை கிருமி நாட்டில் அதிவேகமாக பரவியது. பின்னர் மெதுவாக குறைந்து சென்ற தொற்று தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 555 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 423,217ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே வரும் ஐப்பசி மாதம் மூன்றாம் அலை வீசும் என எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில் அனைவருக்கும்  வேகமான தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் பாரதூரமான விளைவுகளை கட்டுப்படுத்தலாம் என சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post