வட மாகாண புதிய பிரதம செயலாளராக சமன் - அங்கஜன் நேரில் சென்று வாழ்த்து - Yarl Voice வட மாகாண புதிய பிரதம செயலாளராக சமன் - அங்கஜன் நேரில் சென்று வாழ்த்து - Yarl Voice

வட மாகாண புதிய பிரதம செயலாளராக சமன் - அங்கஜன் நேரில் சென்று வாழ்த்துவடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளருக்கு கௌரவ அங்கஜன் இராமநாதன் நேரில் வாழ்த்து. 

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.எம். சமன் பந்துலசேன கடமையாற்றிய நிலையிலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக கடமையாற்றிய அ. பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், வவுனியா மாவட்ட செயலாளராக பணியாற்றியபோது அவர் ஆற்றிய சேவைகள் பாராட்டுதலுக்குரியது என, அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியான அவரது சேவைகள் வடமாகாணத்தில் தொடரவுள்ளமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post