குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கம் - Yarl Voice குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கம் - Yarl Voice

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கம்
நடிகையும், பா.ஜ.க நிர்வாகியான நடிகை குஷ்பு டிவிட்டர் வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தார் .தற்போது  @khushsundar  என்ற அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது.அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது 

குஷ்புவை டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர்.அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார்.

 இந்நிலையில் அவரது ஐடி முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதும் இடம்பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.கவுக்கு வந்த குஷ்பு சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் தனக்கு பா.ஜ.கவில் ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும் என நம்பி இருந்தார்.  சமீபத்தில் டெல்லியில் முகாமிட்டு பா.ஜ.க தலைவர்களை சந்தித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் 7ந்தேதியும் குஷ்புவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிட தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post