யாழில் மின்னியலாளர்கள் இரத்ததானம் - Yarl Voice யாழில் மின்னியலாளர்கள் இரத்ததானம் - Yarl Voice

யாழில் மின்னியலாளர்கள் இரத்ததானம்இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு , யாழ் மாவட்ட  மின்னியலாளர்கள் மற்றும்  லயன்ஸ் கழகம் ,பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் சி.ஜெயசூரியன்.தெரிவித்தார்

தற்போது நாட்டில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினை  பூர்த்தி செய்யும் முகமாக எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அந்த அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று 10ஆவது முகாம் காலை 9.30 மணியிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது  குறித்த இரத்த தான முகாமில் மின்னியலாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்-

0/Post a Comment/Comments

Previous Post Next Post