யாழிலுள்ள வெற்று காணிகளில் தென்னை மரக்கன்று நாட்டுப் திட்டம் ஆரம்பம் - Yarl Voice யாழிலுள்ள வெற்று காணிகளில் தென்னை மரக்கன்று நாட்டுப் திட்டம் ஆரம்பம் - Yarl Voice

யாழிலுள்ள வெற்று காணிகளில் தென்னை மரக்கன்று நாட்டுப் திட்டம் ஆரம்பம்அரசினால் நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடும் வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தில் வெற்றி காணிகளில் தென்னை மரக்கன்று நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உள்ள நிலையில்

இராணுவ கட்டளைத் தளபதிமேஜர் ஜெனரல்  சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்  பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் பிரியந்த பெரேரா அவர்களின்நெறிபடுத்தலின் கீழ் எழுதுமட்டுவாளில் உள்ள யாழ் ஆயருக்கு  சொந்தமான காணியில் 700 தென்னை மரங்களை நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெ பர ட்ணம் அடிகளார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் மாவட்ட கியூடெக் நிறுவனத்தின் தலைவர் யூயின் பிரான்சிஸ் அடிகளார்ஆகியோர் கலந்து கொண்டனர்

தென்னை பனை மற்றும் ரப்பர் செய்கை மேம்படுத்தல்  இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோ வினால் குறித்த தென்னை மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  இன்றைய தினம் எழுதுமட்டுவாளில்   யாழ் ஆயருக்கு சொந்தமான காணியில் மரக்கன்றுகள்நாட்டி வைக்கப்பட்டது

இராணுவத்தில் 52ஆவது காலாட்  படைத்தலைமை யக இராணுவத்தினரினால் குறித்த 700 மரக்கன்றுகள் நடும் பணிகள் இடம்பெறவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post