ஒலிம்பிக்கில் இலங்கையின் பெண் நடுவர் - Yarl Voice ஒலிம்பிக்கில் இலங்கையின் பெண் நடுவர் - Yarl Voice

ஒலிம்பிக்கில் இலங்கையின் பெண் நடுவர்

 

ஜப்பானில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் ரீ. நெல்கா ஷிரோமாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள நெல்கா, 1997 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001 ஆம் ஆண்டு முதல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றவராவார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உள்ளுர் குத்துச் சண்டை போட்டிகளின் நடுவராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வரும் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நெல்கா ஷிரோமாலா, 2017  ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவருக்கான விருதினை பெற்றிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post