விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியின் வீட்டிற்கு அங்கஜன் விஜயம் - Yarl Voice விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியின் வீட்டிற்கு அங்கஜன் விஜயம் - Yarl Voice

விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியின் வீட்டிற்கு அங்கஜன் விஜயம்கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி புருசோத்தமன் அரவிந்தனை, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரில் சென்று சந்தித்தார்.

அரவிந்தனின் வீட்டுக்கு இன்று காலை விஜயம் செய்த அங்கஜன் இராமநாதன் அவர்கள், விடுதலைக்கு பின்னதான எதிர்கால வாழ்வின் மேம்பாடு தொடர்பாக கேட்டறிந்து, தமது ஆதரவு எப்போதும் கிடைக்கும் என்ற உறுதிமொழியையும் வழங்கினார்.

அழகியல்சார் கைப்பணி பொருட்கள் உற்பத்திகளில் தமது குடும்பத்தினருக்கு இருக்கும் அறிவைக் கொண்டு எதிர்காலத்தில் முன்னேற்றமடைய விரும்புவதாகவும் புருசோத்தமன் அரவிந்தன் தெரிவித்தார்.

குறித்த உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்க தாம் தயாராக இருப்பதாக, இதன்போது கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post