ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றி கொடியை ஏற்றியது தலிபான் - Yarl Voice ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றி கொடியை ஏற்றியது தலிபான் - Yarl Voice

ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றி கொடியை ஏற்றியது தலிபான்


 

ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள முக்கிய பகுதியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் அங்கு தமது கொடியை ஏற்றியுள்ளனர்.

கந்தகாரிற்கு அருகில் உள்ள ஸ்பின்பொல்டாக் எல்லையில் தலிபானின் வெள்ளை கொடி பறப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட பகுதியை தலிபான் கைப்பற்றியுள்ளது என வெளியான செய்திகளை ஆப்கான்அதிகாரிகள் நிராகரித்துள்ள போதிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அந்த நாட்டின் படைவீரர்களுடன் ஆப்கான் தீவிரவாதிகள்  உரையாடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

எந்த மோதலும் இன்றி தலிபான் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளது என தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இந்த தகவலை உறுதிப்படுத்த முடியாத போதிலும் பாக்கிஸ்தான் அதிகாரிகள் இந்த பகுதியை தலிபான் கைப்பற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர் என பிபிசி குறிப்பிட்டுள்ளது.

பாக்கிஸ்தான் பகுதியிலிருந்து பத்திரிகையாளர்களையும் பொதுமக்களையும் அந்த எல்லையை நோக்கி செல்லவேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாக்கிஸ்தானில் அவசரபாதுகாப்பு கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post