ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் நாளை போராட்டம் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மகளீர் அமைப்புக்கள் அழைப்பு - Yarl Voice ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் நாளை போராட்டம் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மகளீர் அமைப்புக்கள் அழைப்பு - Yarl Voice

ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் நாளை போராட்டம் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மகளீர் அமைப்புக்கள் அழைப்புமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் வீட்டில் போரில் இறந்த டயகம சிறுமிக்கு நீதி கோரும் யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பு தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் இன்றைதய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பெண்கள் அமைப்பு தமது கண்டனத்தை வெளியிட்டதுடன் நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பில் பெண்நிலைவாதியும் சமூக செயற்பாட்டாளருமான ரஜினி ராஜேஸ்வரி இவ்வாறு கருத்து தெரிவித்தார்...

நாளைய தினம் அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உடன் இணைந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை நாங்கள் யாழ்ப்பாண நகரத்தில் மேற்கொள்ள உள்ளோம்.

 இலங்கையில் கடந்த காலங்களாக பெண்கள் சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 

இது தொடர்பில் நாங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தோம். இதனடிப்படையில் இழந்த சிறுமி நாளைய தினம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவில் பாரிய போராட்டத்தினை நடத்தி நடத்த நாங்கள் முன் வந்துள்ளோம்.
இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்குபற்ற வேண்டும்.

 தனியா இந்தப் போராட்டத்தை மட்டும் எடுத்துவிட்டு எங்களுடைய செயற்பாட்டினை நாங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து குறிப்பிட்ட சிறுமிக்காகவும் அதேபோல் இந்த சிறுமி போன்று ஏனைய தெரிவிக்கும் இனிவரும் காலங்களில் இவ்வாறு துஷ்பிரயோகம் இடம்பெறாமல் தடுப்பதற்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post