பொள்ளாச்சி சம்பவத்தை சொல்கிறதா சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’? - Yarl Voice பொள்ளாச்சி சம்பவத்தை சொல்கிறதா சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’? - Yarl Voice

பொள்ளாச்சி சம்பவத்தை சொல்கிறதா சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’?தனிமையான பகுதியில்இ பாழடைந்த பங்களாவில் ஏராளமான இளைஞர்கள் தலை குப்புறக் கிடக்க ஒருவனின் காலைப் பற்றி இழுத்துக்கொண்டு வரும் சூர்யா கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்
'சூரரைப் போற்று' வெற்றியை அடுத்து பெரு வெற்றிக்குத் தயாராக இருக்கிறார் சூர்யா. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தி அடைந்தது மிகப்பெரிய உயரம்.

 அதேப்போல சூர்யாவின் கரியரிலும் பாண்டிராஜின் ‘எதற்கும் துணிந்தவன்’ பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

‘எதற்கும் துணிந்தவன்’ டீசரில் உயரமான வாளை தூக்கிக்கொண்டு எக்கச்சக்க கோபத்தோடு வரும் சூர்யா நிஜமாகவே இளைஞர்களின் மனம் கவர்கிறார்.

 தனிமையான பகுதியில்இ பாழடைந்த பங்களாவில் ஏராளமான இளைஞர்கள் தலை குப்புறக் கிடக்க ஒருவனின் காலைப் பற்றி இழுத்துக்கொண்டு வரும் சூர்யா கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். ஆத்திரத்துக்கான காரணம் என்ன என விசாரித்ததில் தெரிந்தவை இங்கே!

சில ஆண்டுகளுக்கு முன் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியஇ தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்தே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். 

நிஜம் எப்போதும் வெளியே வந்த செய்திகளை விட பயங்கரமானதாக இருக்கும் என்பார்கள். அதுபோலவே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் நடந்த பல விஷயங்களைக் கொண்டு கதை சொல்லியிருக்கிறாராம் பாண்டிராஜ்.

சூர்யாவின் படம் பொள்ளாச்சி சம்பவம் என்றதும் அலர்ட் ஆகிவருகிறது அதிமுக வட்டாரம்!


0/Post a Comment/Comments

Previous Post Next Post