கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்துக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டார்.
தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்த அவர், சுகநலன்களை விசாரித்ததோடு கள நிலமைகளையும் கேட்டறிந்து கொண்டார். மேலும், மக்களது தேவைகளுக்கான உடனடித்தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
“தற்போதைய இந்த சூழ்நிலைகளில் தம்மை வந்து சந்தித்த ஒரே மக்கள் பிரதிநிதி அங்கஜன் இராமநாதன்” என்பதைச் சுட்டிக்காட்டிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள், தமது நன்றியை அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குத் தெரிவித்தனர்.
அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட அவர், மருத்துவப் பணியாளர்களோடும் கலந்துரையாடினார்.
Post a Comment