துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை - ஹிருணிகா - Yarl Voice துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை - ஹிருணிகா - Yarl Voice

துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை - ஹிருணிகா
துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்னமும் பதில் வழங்கவில்லை அவரது பதிலிற்காக காத்திருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து எனக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்காத அதேவேளை எனது குடும்பத்தவர்கள் பலர் சர்வதேச அமைப்புகளிற்கு இது குறித்து கடிதங்களை அனுப்பியுள்ளனர் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீது கொடுக்கின்ற அழுத்தங்கள் காரணமாக சிலவகையான பதில் நடவடிக்கைகள் இடம்பெறலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு கிடைத்த பின்னர் தன்னை சுற்றியுள்ளவர்களின்  பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானும் எனது தாயும் இலங்கையில் இருக்கின்றோம் நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளோம், இந்த நபர் வெளியில் நடமாடுவதால் நாங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம்,

துமிந்த சில்வா கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் எவ்வாறு நடந்துகொண்டாரோ அதுபோல அவரும் அவரை சுற்றியுள்ள காடையர்களும் செயற்படுவார்கள் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post