வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் நேற்றிரவு (2021.07.29) பணம் விற்பனை சரக்குகள் என்பன திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த கடை உரிமையாளரின் கடையும் அவரது வீடும் ஒரே காணியில் அருகருகே உள்ளது. இந்த நிலையில் அவர் நேற்றிரவு தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று தூக்கத்தில் இருந்த வேளை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 67 ஆயிரம் ரூபா பணம் மற்றும் விற்பனை சரக்குகள் என்பன திருட்டுப் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment