யாழ்.பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை! - Yarl Voice யாழ்.பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை! - Yarl Voice

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை!யாழ்.பல்கலை  நுண்கலைத்துறை விரிவுரையாளர் முன்னாள் போராளி நல்லை கண்ணதாஸ் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றினால் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

03 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்த அவரை, குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 22 ஆம் திகதி விடுதலை செய்திருந்தது.

இருந்தபோதிலும் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பில் மீள்விசாரணை நடத்தி வழக்கினை முடிவுறுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

வழக்குத் தொடுனரான சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி, குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்தார்.

வழக்குத் தொடுநர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், கண்ணதாஸனை விடுவித்து விடுதலை செய்து கட்டளையிட்டார்.

கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post