இலங்கையில் தடுப்பூசி பெறாதோர் குறித்து அவசர கணக்கெடுப்பு - ஜனாதிபதி அவசர உத்தரவு - Yarl Voice இலங்கையில் தடுப்பூசி பெறாதோர் குறித்து அவசர கணக்கெடுப்பு - ஜனாதிபதி அவசர உத்தரவு - Yarl Voice

இலங்கையில் தடுப்பூசி பெறாதோர் குறித்து அவசர கணக்கெடுப்பு - ஜனாதிபதி அவசர உத்தரவு
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்த போதும், அவற்றைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது பற்றி பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு, சில தினங்களுக்குள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்த அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post