அரச ஊழியர்கள் எதிர்வரும் ஓகட்ஸ் 02 முதல் பணிக்கு - Yarl Voice அரச ஊழியர்கள் எதிர்வரும் ஓகட்ஸ் 02 முதல் பணிக்கு - Yarl Voice

அரச ஊழியர்கள் எதிர்வரும் ஓகட்ஸ் 02 முதல் பணிக்கு

 

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறீக்கு ஜனாதிபதியின் செயலாளர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். 

இதன் அடிப்படையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை கடமைக்கு அழைத்தல், வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது,

0/Post a Comment/Comments

Previous Post Next Post