கௌதாரிமுனை மக்கள் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளனர் - சிறீதரன் - Yarl Voice கௌதாரிமுனை மக்கள் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளனர் - சிறீதரன் - Yarl Voice

கௌதாரிமுனை மக்கள் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளனர் - சிறீதரன்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கௌதாரி முனையில் கடல் அட்டை பண்ணை தொடர்பாகவும் அதனால் கடல் தொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும்  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று கௌதாரி முனை மண்ணித்தலைச்சி கோவில் முன்பாக  இடம்பெற்றிருந்தது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கௌதாரி முனை கடல் பகுதியில் கடல் அட்டை பண்ணை அமைத்தது தொடர்பாகவும் அதனால் அங்குள்ள கடல்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (26) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

 குறித்த கலந்துரையாடலில் போது  கௌதாரி முனையில் இருக்கின்ற  வளங்கள் சூட்சமமான முறையில் கொள்ளையடிக்கப்படுவதாகவும் இங்குள்ள மண் தென்னிலங்கைக்கு கொண்டு செல்ல பாரிய திட்டம்  தீட்டுவதாகவும் அஜித் தென்னகோன் உட்பட சில அமைச்சர்களும் இத்திட்டத்திற்கு முழு ழூச்சாக செயற்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடல் வளங்களை சுரண்டுவதற்காக திட்டமிட்டு மக்களுக்கு 1 ஏக்கர் வயலுக்கென்று கடல்தொழில் அமைச்சரால் காணி வழங்கி வைக்கும் திட்டம்  மக்களை திசை திருப்புவதற்கான திட்டம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post