இந்திய நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி... போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா எனக் கேள்வி - Yarl Voice இந்திய நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி... போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா எனக் கேள்வி - Yarl Voice

இந்திய நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி... போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா எனக் கேள்வி மத்தியஅரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவி்த்தும் விவசாயிகள் பிரச்சினையில் தீர்வு காண வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துஇ அந்த மூன்று சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விவசாயிகள் டெல்லியின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்திற்குத் தீர்வு காண விவசாயிகளுக்கும் மத்திய மத்திய அரசுக்கும் இடையே 12 சுற்றுப் பேச்சு நடத்தப்பட் நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையே வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த தற்காலிகமாக தடை விதித்து உச்ச நீதிமன்றம். அந்தச் சட்டங்களை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் எம்.பி.யும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டியவாறு நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
 
விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராகுல் காந்தி இவ்வாறு வந்தார். ராகுல் காந்தியுடன் டிராக்டரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் ஊர்வலமாக வந்து மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை மத்திய அரசு நசுக்குகிறது நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. 

வேளாண் சட்டங்கள் என்ற போர்வையில் இருக்கும் கறுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள் சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும் என்பது இந்த தேசத்திற்கே தெரியும். மத்திய அரசின் கூற்றுபடி ‘விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்கிறது.

 ‘போராட்டம் நடத்தும் விவசாயிகள் அனைவரும் தீவிரவாதிகள்’ என்கிறது. விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? உண்மையில் விவசாயிகளின் உரிமை பறிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post