ஆப்கானில் இருந்து தப்பிவந்த பெண்: 12 ஆண்டுகளுக்கு பின் தாயுடன் உணர்ச்சி மிகுந்த சந்திப்பு - Yarl Voice ஆப்கானில் இருந்து தப்பிவந்த பெண்: 12 ஆண்டுகளுக்கு பின் தாயுடன் உணர்ச்சி மிகுந்த சந்திப்பு - Yarl Voice

ஆப்கானில் இருந்து தப்பிவந்த பெண்: 12 ஆண்டுகளுக்கு பின் தாயுடன் உணர்ச்சி மிகுந்த சந்திப்பு
12 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. இதனால் அங்கு வாழ அஞ்சிய ஆப்கானியர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச்சென்று குடியேற முயற்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த 56 வயதான கதிரா என்கிற பெண், தனது மகள் மற்றும் 3 மகன்களுடன் மீட்பு விமானம் மூலம் காபூலில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி வந்துள்ளார். கதிராவின் மூத்த மகள் ஷகிபா தாவோத், பிரான்ஸ்சில் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 

பாரிஸ் விமான நிலையத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட காலத்திற்குப் பின் தனது தாய், சகோதரர்கள், சகோதரியை கண்டு உணர்ச்சிப்பெருக்கில் காணப்பட்டார் ஷகிபா தாவோத்.

இதுகுறித்து ஷகிபா தாவோத் கூறுகையில், ''இன்று நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறேன். என் அம்மா என்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்த தருணத்தில், எனது பயங்கள் அனைத்தும் போய்விட்டன'' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post