கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவரும் என வைத்தியசாலைகளில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அச்சுவேலி பத்தமேனி காளி கோவிலடி வீட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையினால் யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் தொற்று காரணமாக மொத்தமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் வடக்கில் 127 பேருக்கு இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment