யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் 41 முதியவர்களுக்கும் 2 ஊழியர்களுக்குமென 43 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முதியோர் இல்லத்தில் 45 முதியவர்கள் உள்ள நிலையில் 41 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியோர் இல்ல ஊழியர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு
இன்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போதே இந்த கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post