கொரோனா இடர்காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு - Yarl Voice கொரோனா இடர்காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு - Yarl Voice

கொரோனா இடர்காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு




யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நாட்டில்  கொரோனா  இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்
சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை  கௌரவிக்கும் முகமாக  தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும்

84, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்குரிய உதவித் தொகை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது

ராணுவத்தின் 512 வது பிரிகேட்  தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் கலந்துகொண்டு உதவித்தொகையினை வழங்கி வைத்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post