ஆசிரியர்களின் போராட்டத்தை அச்சுறுத்தல்களால் அடக்க முயற்சி - பொலிஸாரின் அராஜக செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் - Yarl Voice ஆசிரியர்களின் போராட்டத்தை அச்சுறுத்தல்களால் அடக்க முயற்சி - பொலிஸாரின் அராஜக செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் - Yarl Voice

ஆசிரியர்களின் போராட்டத்தை அச்சுறுத்தல்களால் அடக்க முயற்சி - பொலிஸாரின் அராஜக செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்



ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது செய்வதையோ நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் யாழில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது...

இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த வாகனப் பேரணி போராட்டத்தை குழப்புவதற்கு போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

 எனினும் இந்த தடைகளை தாண்டி எமது பேரணி திட்டமிட்டவாறு நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையைப் குழப்பும் போலீசாரினதுவும் அரசினதும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனை அடுத்து பேரணிக்கு அழைத்து வந்த வாகனத்தையும் ஒலி ஒளிபரப்பு செய்த உரிமையாளர்களையும் போலீசார் விசாரணை செய்வதும் கைது செய்வதுமான பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை திசை திருப்பி குழப்புகின்ற பொலிசாரின் நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு போலீசாரின் இத்தகைய செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

போராட்டத்திற்கு உதவிய வாகனத்தின் சாரதியையும் ஒளிபரப்பு சேவை வழங்கியவர்களையும் கைது செய்வதையோ விசாரணை செய்வதையோ பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post