நாட்டை முடக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை - Yarl Voice நாட்டை முடக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை - Yarl Voice

நாட்டை முடக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைநாட்டை ஒரு மாதத்துக்காவது முடக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டை குறைந்தது நான்கு வாரங்களுக்காவது முடக்கி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளாந்தம் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதால், சுகாதாரத் துறையினருக்கு குறித்த நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலையுள்ளது என்றும் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை காணப்படுவதால் இந்த  நடவடிக்கையை விரைவாக எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் 3 ஆயிரம் பேர் அடை யாளம் காணப்படுகின்றனர் என்றும் நாளாந்தம் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000 ஆக பதிவாகியுள்ளது  என்றும் பல வைத்தியசாலைகளில் பிரேத அறைகளில் கொரோனா தொற் றால் உயிரிழந்தோரின் சடலங்கள் குவிந்துள்ளன என்றும் வைத்தியசாலைகளின் வார்ட்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளின் கொள்ளளவு திறனை மீறியுள்ளனர் அதேவேளை கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கத்துக்கு சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post