கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் திட்டமிட்டபடி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது - கல்வி அமைச்சர் - Yarl Voice கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் திட்டமிட்டபடி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது - கல்வி அமைச்சர் - Yarl Voice

கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் திட்டமிட்டபடி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது - கல்வி அமைச்சர்



கொரோனா மீண்டும் தலைதூக்குவதால் திட்டமிட்டபடி பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது

ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது என கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் நிலை அதிகரித்து உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்து இருந்தது.

அதற்கு முன்னர் பாடசாலை ஆசிரியர் அதிபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் தற்போது நாட்டில் நாளாந்த கொரோனா மரணங்கள் மற்றும் பாதிப்புகள் அதிகரித்து உள்ளதால் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post