இலங்கைக்கு மற்றுமொரு தடுப்பூசி தொகுதியை வழங்கவுள்ள அமெரிக்கா - அமெரிக்க தூதர் - Yarl Voice இலங்கைக்கு மற்றுமொரு தடுப்பூசி தொகுதியை வழங்கவுள்ள அமெரிக்கா - அமெரிக்க தூதர் - Yarl Voice

இலங்கைக்கு மற்றுமொரு தடுப்பூசி தொகுதியை வழங்கவுள்ள அமெரிக்கா - அமெரிக்க தூதர்
இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மற்றொரு தடுப்பூசி தொகுதியை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர மற்றும் பொருளாதார விடயங்கள் உட்பட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள  பரஸ்பர நலன் சார்ந்த பல பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிசக்தி துறையில் அமெரிக்காவின் முதலீடுகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்ளும் கொவிட் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கையின் வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தூதர் சபாநாயகருக்கு தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post