நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும், ஆபத்தான சிக்கல் களை ஏற்படுத்தும் டெல்டா கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரா செனெகா மற்றும் கொவிஷீல்ட் என்று அழைக்கப்படும் இரண்டும் ஒரே தடுப்பூசி என்றும் பொதுமக்கள் எந்தப் பயமும் சந்தேகமும் இன்றி அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தி இரண்டு மாதங் களில் அல்லது ஐந்து மாதங்களின் பின்னர் இரண்டாவது கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாகச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment