இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு


நாட்டில் தீவிரமாக பரவி வரும்கொரோனா  வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் முகமாக ராணுவத்தின் வைத்திய பிரிவினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம்இன்று  யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

 ராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்றுகொரோனா  தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது ஏற்கனவே நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குறித்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post