பழைய பொருட்கள் வாங்குவது போல் பாசாங்கு செய்து வந்தவர்கள் வீட்டில் இருந்த கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோட்டம்! - Yarl Voice பழைய பொருட்கள் வாங்குவது போல் பாசாங்கு செய்து வந்தவர்கள் வீட்டில் இருந்த கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோட்டம்! - Yarl Voice

பழைய பொருட்கள் வாங்குவது போல் பாசாங்கு செய்து வந்தவர்கள் வீட்டில் இருந்த கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோட்டம்!பழைய பொருட்கள் வாங்குவது போல் பாசாங்கு செய்து வந்த இருவர் வீட்டிலிருந்த கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இன்றைய தினம் (2021.08.06) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரண்டு நபர்கள் சுழிபுரம் மத்தியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று பழைய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என விசாரித்துள்ளனர்.

ஒருவர் இவ்வாறு வீட்டு உரிமையாளரிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது மற்றைய நபர் வீட்டினுள் சென்று அங்கிருந்த கைப்பையை தூக்கிக்கொண்டு தப்பியோட அவரைத் தொடர்ந்து மற்றையவரும் தப்பித்துச் சென்றுள்ளார்.

குறித்த கைப்பையில் பணம் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post