உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு - ஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு - ஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு - ஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவுஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ​ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளது.  

மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில் இன்று இவர்கள் மீதான மனு விசாரணைக்கு வந்த போது முன்பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதிகளான நாமல் பலல்லே ஆதித்திய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இசதீன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

சந்தேகநபர்களுக்கு முன்பிணை வழங்கிய நீதிபதிகள் விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு பிற்போட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post