ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
யாழ் மாநகர சபையில் நாம் ஆற்றிவரம் சேவைகளை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் நம்மீது திட்டமிட்ட வகையில் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அத்தகைய குற்றச்சாட்டுகளை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம் அவ்வாறு குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாம் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளவும் தயாராக இருக்கின்றோம் என்றார்
Post a Comment